INTRODUCTION OF ZONAL EDUCATION OFFICE - KALMUNAI
கல்முனை கல்வி வலய மானது அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. கல்முனை கல்வி மாவட்டத்தில் உள்ளது. இதில் கல்முனை தமிழ், கல்முனை முஸ்லிம், சாய்ந்தமருது நிந்தவூர் எனும் ஐந்து கல்வி கோட்டங்கள் அமைந்துள்ளன. கல்முனை கல்வி வலயம் ஆனது பெரிய நீலாவணை, மருதமுனை, கல்முனை, நற்பட்டிமுனை, சேனைக்குடியிருப்பு சாய்ந்தமருது, நிந்தவூர் காரைதீவு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.
மிக வசதியான பிரதேசங்களை உள்ளடக்கிய இப்பிரேதேசமானது மிக வசதியான பாடசாலைகளையும் கொண்டுள்ளது. இங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் அதிகமானோர் இக்கிராமங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதோடு சிலர் 1 அல்லது 2 மணித்தியாலங்களில் பாடசாலை அடைய கூடியவர்களாக இருக்கின்றனர்.
நான் சேவையாற்றும் நிறுவனம் வலயக் கல்வி அலுவலகம் என்பதனால் எங்களுடைய பிரதான பணி கல்வியில் தேர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தனிநபர்களுக்கும் குழுவினருக்கும் உதவி செய்வதாகும் மேலும் தேசிய பொது தேர்ச்சியினை மாணவர் அடைந்து கொள்ள வழி காட்டுவதும் மேற்பார்வை செய்வதும் ஆகும்.
Comments
Post a Comment